புது முகங்களின் 'ஹலோ மிஸ்'
ADDED : 12 hours ago
நமஹா மூவி மேக்கர்ஸ் சார்பில் என்.குமார்லால் நேரு தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹலோ மிஸ்'. இப்படத்தை சாய்ரா இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிஸ்மி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், கல்யாணி நடராஜன், கஜராஜா, ஜானகி சுரேஷ், ஜி.ஞானசம்பந்தன், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, பாலஹாசன், தினேஷ், சுவாமிநாதன், சத்யன், பிர்லா போஸ், சிட்டிசன் மணி, மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்கிறார். இசையை பிரின்ஸ் ஜார்ஜ் அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. காதல், இளமை மற்றும் ரசனையான உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.