உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி நிகழ்ச்சியில் சிரஞ்சீவி : விரைவில் அறிவிப்பு

ஓடிடி நிகழ்ச்சியில் சிரஞ்சீவி : விரைவில் அறிவிப்பு

தெலுங்குத் திரையுலகத்தின் டாப் நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. கடந்த 48 வருடங்களாக தனது வெற்றிகரமான சினிமா பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். சினிமாவைத் தவிர்த்து 2017ம் ஆண்டில் டிவியில் ஒளிபரப்பான 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன்பின் டிவி பக்கம் அவர் போகவேயில்லை.

தற்போது நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திற்காக அவர் 'போட்காஸ்ட்' ஒன்றைத் தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஓடிடி தளங்களில் இதற்கு முன்பு தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, 'அன்ஸ்டாபபிள்' என்ற நிகழ்ச்சியையும், ஜகபதி பாபு 'ஜெயம்மு நிஸ்சயம்மு ரா' நிகழ்ச்சியையும், ராணா டகுபட்டி, “தி ராணா டகுபட்டி ஷோ' ஆகியவற்றையும் தொகுத்து வழங்கி உள்ளார்கள்.

தற்போது சிரஞ்சீவியும் இது போன்ற ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவது ரசிகர்களிடம் ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு திரைப்படத்தில் நடிப்பதை விடவும் அதிகமான சம்பளத்தை இதற்காக அவருக்கு ஓடிடி நிறுவனம் வழங்க உள்ளதாகச் சொல்கிறார்கள். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். நிகழ்ச்சிக்கு முன்னதாக சிரஞ்சீவி குறித்த ஒரு டாகுமென்டரியையும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !