உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தர்மன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஸ்ரீலீலா?

தர்மன் ஒரு பாடலுக்கு நடனமாடும் ஸ்ரீலீலா?

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'தர்மன்' படத்தைப் பற்றி சரியான இடைவெளியில் 'அப்டேட்' கொடுத்து வருகிறார் அதன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. அதேசமயம் படத்தில் வேறு என்ன ஸ்பெஷல் என சமூக வலைத்தளங்களில் துருவித் துருவி தோண்டி எடுத்து தகவல்களைப் பரப்பி வருகிறார்கள்.

மைசூரில் நேற்றுடன் முடிவடைந்த மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு குறித்து படத்தின் இயக்குனர் அப்டேட் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதேசமயம், படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா, நடிகர் ரஜினிகாந்த், நடிகர் ராம் பொதினேனி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து பின் அதை டெலிட் செய்து படத்தில் ராம் பொதினேனியும் நடிக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

அடுத்து மைசூரில் நடந்தது பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு என்பது அதன் புகைப்படங்கள் 'லீக்' ஆன சில வீடியோக்களைப் பார்த்ததுமே புரிகிறது. அதில் 'பராசக்தி' நடிகை ஸ்ரீலீலா சிறப்பு நடனமாடி இருக்கலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பிற்காக அவர் வரும் வீடியோக்கள் சில வெளியாகி உள்ளது. நடனத்தில் தேர்ந்தவரான ஸ்ரீலீலா அப்பாடலுக்கு சரியான தேர்வுதான் என ரசிகர்களும் பகிர்ந்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !