லோ பட்ஜெட் படங்கள் எடுக்க ஆசை: இயக்குனர் அட்லி பேட்டி
விஜய் சேதுபதி நடித்த 'பத்தா' திரைப்பட குழுவினர் - தயாரிப்பாளர் அட்லி, இயக்குனர் பாலாஜி தரணிதரன், இசை அமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகை லிஜோமோல் ஜோஸ், சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பிரித்விராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இயக்குனர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், ''கதையை யோசிக்கும் போது ஒருவன் எங்கு லாக் ஆனால் சரியாக இருக்கும் என்று யோசித்தேன். அதனால் பாத்ரூமில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தேன். நிறைய பேரை ஆடிசன் செய்தேன் இந்த கேரக்டருக்கு சிறுவன் சரியாக இருந்தான். பக்தவச்சலம் என்ற பெயரின் ஷார்ட் பார்ம் தான் பத்தா. செகண்ட் ஆப் எழுதும்போதுதான் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்று தோணுச்சு. நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக் கொண்டேன். இதற்காக ஒரு டீம் வைத்துள்ளேன். ஆடிசன் செய்து தேர்ந்தெடுத்தேன்'' என்றார்.
சாய் அபயங்கர் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமாக இருக்கிறது முதல் படத்திலிருந்து எனக்கு பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கிறார்கள். மக்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தேவையான சவுண்டு வருவதற்கு பல பொருட்களை வாங்கி மியூசிக் செய்தேன்'' என்றார்.
லோ பட்ஜெட் படம்
இயக்குனர், தயாரிப்பாளர் அட்லி பேசியதாவது: ரொம்ப சிம்பிள் கதை பிடித்து இயக்குனரோட மனநிலையும் என்னுடைய மனநிலையும் சேர்ந்தால் நான் அந்த இயக்குனரை தேர்ந்தெடுக்கிறேன். ஒரு தயாரிப்பாளரா ஒரு படத்திற்கு எவ்வளவு தூரம் நிற்க வேண்டும் என்பதை நான் பீல் செய்து இருக்கிறேன். நான் தயாரிக்கிற படங்களில் நான் என்ன செய்ய வேண்டுமோ கத்துக் கொண்டு செய்கிறேன்.
நான் 'ராஜா ராணி' லோ பட்ஜெட்டில் தான் செய்தேன். ஹை பட்ஜெட், லோ பட்ஜெட் என்பது வியாபாரத்திற்கு தான். சிறிய படம் கதை அமைந்தால் செய்வேன். 'ராஜா ராணி' மாதிரி சிறிய படம் மற்றும் 'டியூட்' போன்ற சிறிய படம் எடுக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஹிந்திக்கும் தமிழுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஜவான் படத்தை தமிழில் தான் எழுதினேன்.
அஜித் படம்
தமிழில் தான் எழுதப் பிடிக்கும். தமிழை மட்டும் தான் எழுத தெரியும். பான் இந்தியா என்பதை ஒரு வார்த்தையில் அடக்க வேண்டாம். அந்த காலத்தில் இருந்தே இது இருக்கு. வெளியில் பூ வைத்து அதை வேற மாதிரி காட்டுவதற்கு ஒன்னும் இல்லை. நடிகர் அஜித்குமார் வைத்து படம் பண்ணலாம். நான் ஒரு படம் எடுத்து முடிக்கும் வரை வேறு படத்தை கான்சன்ட்ரேஷன் செய்ய மாட்டேன். ஒரு படத்தை முழுதாக எடுத்து மக்களிடம் சென்ற பின்பு இரண்டு மாதம் வெளியே சென்று விடுவேன். 'ராக்கா' முடிந்த பின்பு அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பேன்.
படத்தில் நடித்த சிறுவன் தான் ஹீரோ, விஜய் சேதுபதி வில்லன். ஆடியோ லான்ச்சில் விஜய் சேதுபதி கூட சொன்னார் சிறுவன் தான் ஹீரோ விஜய் சேதுபதி வில்லன். இவ்வாறு அவர் பேசினார்.