பெங்களூரு பின்னணியில் உருவாகும் தமிழ் படம்
ADDED : 1 days ago
செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்பில் சங்கர் கே.என் மற்றும் சஹானா சங்கர் தயாரிக்கும் படம் 'பீட்சா பாய்ஸ்'. சேகர் கேசவ் சிரின் இயக்குகிறார். குருபிரசாத் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக பெங்களூருவில் நடைபெற்றது. சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஷ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல நடிகர் ஷோப்ராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் கூறும்போது “இளம் கதாநாயகர்கள், நட்பை மையமாகக் கொண்ட கதை மற்றும் பெங்களூருவின் சமகால நகரப் பின்னணி ஆகியவற்றுடன் உருவாகும் 'பீட்சா பாய்ஸ்', வாழ்வாதாரத்தைத் தேடி சொந்த ஊர்களை விட்டு வெளியேறும் இளைஞர்கள் எதிர்பாராத அனுபவங்களில் சிக்கிக்கொள்ளும் வாழ்க்கையைப் புதிய கோணத்தில் எடுத்துக்காட்டும்” என்றார்.