உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இசை புரமோஷனைத் தொடங்கும் சூர்யாவின் 'சீன்' படக்குழு!

இசை புரமோஷனைத் தொடங்கும் சூர்யாவின் 'சீன்' படக்குழு!


ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் 'சீன்'. நவம்பர் 6ல் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டைட்டில் டீஸர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. நஸ்ரியா நசீம் இதில் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு மற்றொரு முக்கியக் காரணமாகும். இதுவரை அமைதி காத்து வந்த படக்குழுவினர், தற்போது இறுதியாகப் படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைப்பில் உருவாகியுள்ள 'ஆத்தி இவ யாரா' என்ற அந்தப் பாடல், அக்டோபர் 8ம் தேதியான நாளை வெளியாகிறது.

இப்படத்தில் சூர்யா, டி.எஸ்.பி இன்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நஸ்லென், ஆனந்தராஜ், லால், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயஸ்ரீ தாமோதரன் இணைத் தயாரிப்பாளராகச் செயல்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !