உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'மண்டாடி'

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகிறது 'மண்டாடி'


சூரி நடித்த 'மண்டாடி' படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கினார். முதன் முறையாக கடலுக்குள் நடக்கும் படகு போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவானது. இதற்காக கடலுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள் இந்த படத்தின் வெற்றிக்கு உதவியது. பரவலான பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த காட்சிகள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் படமாகி இருந்தது. ஆனாலும் படம் வெளியாகும்போது ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியானதாக தெரியவில்லை.

இந்த நிலையில் தற்போது ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாவதாக அறிவித்துள்ளனர். இந்த தகவலை சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர், “மீண்டும் ஓர் அதிரடி அனுபவத்துடன் 'மண்டாடி' படம் ஐமேக்ஸில் வருகிறது. ரசிகர்களின் வேண்டுகோள்படி ஐமேக்ஸ் அனுபவத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

அக்டோபர் 9 முதல் ஐமேக்ஸ், பிவிஆர் பலாஸோவின் பெரிய திரைகளில் 'மண்டாடி' உலகத்தை மீண்டும் ஒரு முறை அனுபவியுங்கள். 'மண்டாடி' திருவிழா தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

'மண்டாடி' படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படத்தில் சூரியுடன், மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !