'பந்தா கேங்ஸ்' என்ன மாதிரியான கதை?
அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பந்தா கேங்ஸ்'. குறும்பட இயக்குனர் மதி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தில் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். சுபா வரதராஜன், ஹரி முனியப்பன், 'தங்கலான்' அர்ஜூன், கே.பி.ஒய்.திவாகர் ஆகியோரும் நடித்துள்ளனர். சத்திய பிரகாஷ் இசை அமைக்கிறார், சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் மதி கூறியிருப்பதாவது: ஹவுஸிங் போர்டில் வசிப்பவர்களுக்கும், போலீஸ் குவார்ட்டர்ஸில் வசிப்பவர்களுக்கும் இடையிலான பிரச்னைதான் படத்தின் கதை. போலீஸ் குவார்ட்டர்ஸூம், நடுத்தர மக்களுக்கான ஹவுஸிங் போர்டு குடியிருப்பும் எதிரெதிரே இருக்கும். ஹவுஸிங் போர்டுல இருக்குற தினேஷூக்கும், போலீஸ் குவார்ட்டர்ஸ்ல இருக்குற லிங்கேஷூக்கும் இடையே இருக்கும் பிரச்னைகள் எதுவரைக்கும் போய் நிக்குதுங்கறதுதான் திரைக்கதை. குடும்பத்தோட ரசிக்கக்கூடிய ஆக்ஷன் காமெடி படமாக இது இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.