பிசியான சாய் பிரித்விராஜ்
விஜய்சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ் நடித்த 'பத்தா' படம் சமீபத்தில் வெளிவந்தது. இதனை பாலாஜி தரணிதரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் 'சபரி' என்ற முக்கியமான கேரக்டரில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாய் பிரித்விராஜ். இவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய்சேதுபதி “படத்தின் ஹீரோ சாய் பிரித்விராஜ்தான். நான் வில்லன் கேரக்டரில்தான் நடித்துள்ளேன்” என்று பேச இப்போது வைரலாகி இருக்கிறார் சாய் பிரித்விராஜ்.
அதோடு தற்போது தனுஷ் நடிக்கும் அவரது 56வது படத்தில் நடித்து வருகிறார். அட்லி இயக்கி வரும் பான் இந்தியா படமான 'ராக்கா' படத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும் பட வாய்ப்புகளும் வருகின்றன. தற்போது 4ம் வகுப்பு படித்து வரும் சாய் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டும் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்.
சாய் பிரித்வியின் அக்கா ஒரு துணை நடிகை. அவர் 'பத்தா' படத்தில் வரும் தேன்மொழி கேரக்டரில் நடிக்க ஆடிசன் சென்றபோது துணைக்கு தம்பியை அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் வயதும் தோற்றமும் பொருந்தவில்லை என்று அக்கா நிராகரிக்கப்பட்டார். துணைக்கு சென்ற தம்பியை பார்த்த இயக்குனர் பாலாஜி தரணிதரன் அவனுக்கு ஸ்பெஷல் ஆடிசன் நடத்தி சபரி கேரக்டருக்கு தேர்வு செய்திருக்கிறார்.