உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பத்தா' வசூல் : விஜய் சேதுபதியின் அடுத்த படங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா ?

'பத்தா' வசூல் : விஜய் சேதுபதியின் அடுத்த படங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா ?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர் என்று பெயர் வாங்கியவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடிக்கத் தயங்காதவர்.

அவரது நடிப்பில் 2024ல் வெளிவந்த 'மகாராஜா' படம் 90 கோடி வசூலையும், கடந்த வருடம் வெளிவந்த 'தலைவன் தலைவி' படம் 100 கோடி வசூலையும் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு வருடங்களில் வெளிவந்த மற்ற படங்களான 'மெர்ரி கிறிஸ்துமஸ், விடுதலை 2, ஏஸ்', இந்த வருடம் வெளிவந்த 'காந்தி டாக்ஸ்' ஆகிய படங்கள் வசூலைப் பெறவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'பத்தா' படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், அதற்குரிய வசூலைப் படம் பெறாமல் ஆச்சரியப்படுத்தியது. மொத்தமாக 30 கோடி வசூல் வந்திருக்கும் என்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள்தான் படம் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்கும்.

படத்தின் பட்ஜெட் 24 கோடி இருக்கலாம் என்பது தகவல். ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை ஆகியவைதான் தயாரிப்பாளருக்கான லாபம். தியேட்டர் வசூல் லாபத்தைத் தருமா என்பது பின்னர் தான் தெரிய வரும் என்கிறார்கள்.

'பத்தா' படத்தின் வசூல் நிலவரம், விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளியாக உள்ள 'டிரெயின், ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு' ஆகிய படங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 'டிரெயின்' படம் டிசம்பர் 4 வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். 'ஸ்லம்டாக்' படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !