ஒரே படத்தை அடுத்தடுத்து மூன்று மொழிகளில் ரீமேக் செய்த ஜோசப் இயக்குனர்
மலையாளத்தில் கடந்த 2018ல் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான படம் ஜோசப். தனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்களை தானே தேடி கண்டுபிடித்து உண்மை குற்றவாளிகளை தண்டிக்கும் கதாபாத்திரத்தில் ஜோசப் நடித்திருந்தார். இந்த படத்தை எம் பத்மகுமார் இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து தமிழில் இதை ஆர்கே சுரேஷ் நடிப்பில் விசித்திரன் என்கிற பெயரில் இயக்கினார் பத்மகுமார்.. இங்கே ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை பாலிவுட் நடிகர் சன்னி தியோலுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது பாலிவுட்டிலும் சன்னி லியோனை வைத்து சூர்யா என்கிற பெயரில் இயக்கி வருகிறார் பத்மகுமார். பிரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் தனுஸ்ரீ சக்கரவர்த்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இன்னும் தென்னிந்திய நடிகர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள இயக்குனர் தனது ஒரே படத்தை அடுத்ததாக தமிழ், ஹிந்தி என மாற்றி மாற்றி ரீமேக் செய்வது நீண்ட நாளைக்கு பிறகு இப்போது நடந்துள்ளது.