முன்னாள் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த ஹாலிவுட் நடிகர்
ADDED : 13 hours ago
'ஸ்பைடர் மேன்' வரிசை படங்களில் ஸ்பைடர் மேனாக நடித்து புகழ்பெற்றவர் டோபி மேகுவேர். இவர் ஜெனிபர் மேயர் என்பவரை 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, 2016ல் இவர்கள் பிரிந்தனர். 49 வயதான ஜெனிபர் மேயர், தற்போது நைஜீரியத் தொழிலதிபர் ஜெப்ரி ஒகன்லேசியை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார்.
இந்தத் திருமண விழாவை முன்னின்றி நடத்தி வைத்தவர் டோபி மேகுவேர். இந்தத் திருமண நிகழ்வில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, நடிகை கோர்ட்னி காக்ஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த திருமணம் தற்போது வைரலாகி உள்ளது.