உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ரணபாலி' : கணவன், மனைவி கூட்டணி வாகை சூடுமா?

'ரணபாலி' : கணவன், மனைவி கூட்டணி வாகை சூடுமா?


ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் பான் இந்தியா படமாக இன்று வெளியாகியுள்ளது. ரஜினி படங்களுக்கு, தமிழகத்தைத் தவிர தென்னிந்திய மாநிலங்களில் தனி வரவேற்பு கிடைக்கும். இந்த முறை 'ஜெயிலர் 2' டிரைலருக்கு ஹிந்தியிலும் அதிகப் பார்வைகள் கிடைத்துள்ளதாலும், ஹிந்தி நடிகர்களான மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன் ஆகியோரும் நடித்திருப்பதாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கில் நாளை 'ரணபாலி' படம் வெளியாகிறது. காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் இது. அவர்களது கல்யாணத்திற்குப் பிறகு ஜோடியாக நடித்து வெளிவரும் படம் இது. அதனால், இப்படம் மீதும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. சுதந்திர காலத்திற்கு முந்தைய சரித்திரப் படமாக உருவாக்கத்திலும் தனி கவனத்துடன் படக்குழு செயல்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

டப்பிங் படமாக இருந்தாலும், ரஜினிகாந்த் படம் என்பதால் தெலுங்கில் 'ஜெயிலர் 2' படத்திற்கும் வரவேற்பு இருக்கும். அந்த போட்டியையும் சமாளித்து 'ரணபாலி' எப்படியான வெற்றியைப் பெறப் போகிறது என தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !