உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா': சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த திட்டம்

'ராமாயணா': சர்வதேச அளவில் அறிமுகப்படுத்த திட்டம்


நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணம் பற்றி இதற்கு முன்பு சில படங்களும், டிவி தொடர்களும் வெளிவந்துள்ளன. ஆனால், இந்தப் படத்தை அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் இந்தப் படத்தைக் கொண்டு செல்ல படக்குழு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அது குறித்து நேற்று படத்தின் தயாரிப்பாளர்கள் நமித் மல்கோத்ரா, யஷ், இயக்குனர் நிதேஷ் திவாரி ஆகியோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “ராமாயணம் எனும் திரைக் காவியத்தை உருவாக்கத் தொடங்கியபோது, இந்தியாவின் தலைசிறந்த புராணத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதே எங்கள் கனவாக இருந்தது. நாளை, அந்தக் கனவை நனவாக்கும் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறோம்.

ராமாயணத்திற்கான சர்வதேச விளம்பரப் பிரசாரத்தை சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் தொடங்குகிறது. காலத்தைக் கடந்த இந்தக் காவியத்தை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. அவர்களில் பலருக்கு இந்த காவியத்தை பற்றிய முதல் அறிமுகமாக இது அமைய போகிறுது. அவர்களில் பலருக்கு இந்த காவியத்தை பற்றிய முதல் அறிமுகமாக இது அமைய போகிறது.

நமது உண்மை. நமது வரலாறு. இந்தியாவிலிருந்து, உலகிற்கு. ஜெய் ஸ்ரீ ராம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச அளவிலான ரசிகர்களைக் கவர்வதற்காக, இன்று 'ராமாயணா' படத்திற்கான புதிய டிரைலர் வீடியோ ஒன்று வெளியாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !