உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உதவியை விளம்பரம் செய்தது ஏன்? : ராஷ்மிகா விளக்கம்

உதவியை விளம்பரம் செய்தது ஏன்? : ராஷ்மிகா விளக்கம்

நடிகை ராஷ்மிகா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து 'புராஜக்ட் அன்னபூர்ணா' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக தற்போது 400 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை குறித்து ராஷ்மிகா தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

கோடி கணக்கில் மக்களுக்கு உதவி செய்கிற நட்சத்திரங்கள் அமைதியாக இருக்கும்போது இந்த அன்னபூர்ணா திட்டத்தை விளம்பரம் செய்து ராஷ்மிகா மலிவான விளம்பரம் தேடுகிறார் என்ற சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது-.

இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்து ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில் “இதுவரை நான் 400 குடும்பங்களை தத்தெடுத்து இருக்கிறேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு தேவையான அரிசி, மாவு, எண்ணெய், பருப்பு ஆகியவற்றை அளிப்பேன். இது ஒவ்வொரு வருடமும் தொடரும்.

சமையலுக்கு தேவையான பொருட்களுக்கு செலவாகும் பணத்தை அவர்கள் சேமித்து, தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக பயன்படுத்தலாம். அன்புடன் செய்யும் சின்ன விஷயம் கூட ஒருவரது வாழ்க்கையை அடியோடு மாற்றும். அதுவும் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, நம்மால் இயன்ற அளவுக்கு சின்ன விஷயத்துடன் நல்ல விஷயத்தை தொடங்கலாம். இத்தனை ஆண்டுகளாக நான் சந்தித்த கஷ்டங்கள் அனைத்தும், இந்த மக்களின் சிரிப்பை பார்க்கும்போது அப்படியே மறந்துவிடுகிறது.

இதுவரை பல்வேறு உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்தேன். இம்முறை அதை அனைவருக்கும் தெரியும்படி செய்துள்ளேன். காரணம், நான் உதவி செய்வதை பார்த்து மற்றவர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்பதாலேயே வெளியே சொல்லியிருக்கிறேன்”.

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !