‛ஜெயிலர் 2' மூன்று நாட்களில் 300 கோடி வசூல் ?
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடித்து அக்டோபர் 15ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர் 2'. இப்படம் மூன்றே நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை இன்னும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் சமூக வலைதளங்களிலும் இந்த 300 கோடி வசூல் என்பது பற்றி நிறைய பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி என தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது வட இந்தியாவிலும் இப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் வெளியாகி இருந்தால் இன்னும் அதிகமா வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
வெளிநாடுகளில் முக்கிய வசூல் பகுதியான வட அமெரிக்காவில் இப்படம் 4.1 மில்லியன் வசூலைக் கடந்துள்ளதாக அப்பகுதியின் வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதர வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.
இன்று, நாளை, நாளை மறுநாள் என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் 500 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்துவிடும் என்பதுதான் தற்போதைய தகவல். 'ஜெயிலர்' படத்தின் வசூலை இப்படம் நிச்சயம் கடந்துவிடும். ‛2.0' படத்தின் வசூலையும் கடக்குமா என்பது அடுத்த வாரத்தில் தெரிய வரும்.