500 கோடி உறுதியானது : ஆயிரம் கோடியை தொடுமா ஜெயிலர் 2?
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‛ஜெயிலர் 2' படம் நாளைக்குள் 500 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள். இது குறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. ஆனாலும், சினிமா வட்டாரத்தில் உலகம் முழுவதிலும் உள்ள வசூலை கணக்கிட்டால் 500 கோடியை தாண்டுமாம். இந்த வாரமும் புக்கிங் நன்றாக உள்ளது என்கிறார்கள்.
சரி ஆயிரம் கோடியை தொடுமா? தமிழில் முதலில் ஆயிரம் கோடி வசூலித்த படம் என்ற பெருமையை ஜெயிலர் 2 பெறுமா என்று விசாரித்தால், இன்னும் சில நுாறுகோடிகள் அள்ளுவது உறுதி. தீபாவளி வரை பெரிய படங்கள் இல்லை. அதனால், தென்னிந்தியாவில் வசூல் வேட்டை தொடரும்.
தெலுங்கு, மலையாளத்திலும் படத்துக்கு நல்லவரவேற்பு. உலக அளவிலும் நல்ல வசூலை ஈட்டி உள்ளது. ஆனால், வட இந்தியாவில் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஓடிடி வெளியீடு காரணமாக மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அங்கு ஜெயிலர் 2 வெளியாகவில்லை. இதனால் அங்கு பெரிய வசூல் இல்லை.
ரஜினி நடித்த 2.0 படத்துக்கு ஹிந்தியில் நல்ல வசூல் இருந்தது. அதில் அக் ஷய்குமார் இருந்ததால், அந்த படத்தை ஹந்தி படமாகவும் பார்த்தார்கள். ஜெயிலர் 2 படத்தை தென்னிந்திய படமாகவே பார்க்கிறார்கள். அதனால் அதிர்ஷ்டம், கூட்டம் வந்து கொண்டே இருந்தால் ஆயிரம் கோடி வசூலை ஈட்ட வாய்ப்பு என்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் குவித்த படமாக ரஜினியின் 2.0, ரூ.800 கோடி வசூல் உடன் முதலிடத்தில் உள்ளது. அதை ஜெயிலர் 2 முறியடிக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.