'லோன் வாங்கி, கார் வாங்காதீங்க'! - நடிகர் அப்புக்குட்டி
ADDED : 1 days ago
புஷ்வானம் டாக்கீஸ் சார்பில், கண்ணன் சாவித்திரி கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் பண்டமாற்று. இந்த குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய நடிகர் அப்புக்குட்டி, ''இந்த படத்தின் கதை வட்டிக்கு பணம் வாங்குவது, கார் அடமானம் வைப்பது. அதனால் வரும் பிரச்னைகளை சொல்கிறது. நானும் எனது காரை அடமானம் வைத்து, அவதிப்பட்டு உள்ளேன். எல்லா நடிகர்களும் வசதியானவர்கள் இல்லை. 10 சதவீதம் நடிகர்கள் தான் வசதியாக இருக்கிறார்கள். அதனால் நடிகர்களே, லோன் வாங்கி கார் வாங்காதீங்க! ஒரு மாதம் வருமானம் வரும். பல மாதங்கள் வருமானம் வராது. மாட்டிக்குவீங்க. எனது அனுபவத்தில் சொல்கிறேன்'' என்று பேசியுள்ளார்.