'தர்மன்' படத்திற்கு 'பிரஷர்' ஏற்றும் ரசிகர்கள்
இந்திய சினிமாவில் வசூலில் புதிய சாதனையைப் படைக்குமா என 'ஜெயிலர் 2' படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. தென்னிந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது வட இந்திய ரசிகர்களும் இப்படத்தை ரசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பல பதிவுகளை, வீடியோக்களைப் பார்க்க முடிகிறது.
ரஜினியின் அதிகபட்ச வசூல், தமிழ் சினிமாவின் அதிக பட்ச வசூல் என '2.0' படம் 800 கோடி வசூலித்ததே இதுவரையிலான சாதனையாக இருக்கிறது. அந்த சாதனை முறியடிக்கப்படுமா என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதனிடையே, ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'தர்மன்' படம் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாகி உள்ளது. அப்படக்குழுவினருக்கு 'ஜெயிலர் 2' படம் தந்த வெற்றி நிச்சயம் ஒரு 'பிரஷர்'--ஐ ஏற்படுத்தி இருக்கிறது. இளம் இயக்குனரான அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகச் செய்திகள் வருகின்றன.
2027 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'ஜெயிலர் 2' படம் அதன் ஓட்ட முடிவில் உருவாக்கும் வசூல் தொகை 'தர்மன்' படத்தின் வியாபாரத்திற்கும் பயனளிக்கும். அதே சமயம் அப்படம் பான் இந்தியா அளவில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்திலும் இருக்க வேண்டும் என ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.