உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ்

ரன்பீர் கபூரா.. ரன்வீர் சிங்கா... : குழம்பிய தயாரிப்பாளர் தில் ராஜ்

பாலிவுட்டில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கும் ராமாயணம் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இதை நித்தேஷ் திவாரி இயக்கியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் பிரமாண்டமான பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் படத்தின் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் தில் ராஜு, நாயகனான ரன்பீர் கபூரை பாராட்டிப் பேசும் போது ஒன் ஆப் தி பெஸ்ட் ஹீரோஸ் ரன்வீர் சிங் என்று தவறுதலாக ரன்வீர் சிங் பெயரை கூறிவிட்டார். அரங்கத்தில் இருந்தவர்கள் பலரும் மேடையில் அமர்ந்திருந்த ரன்பீர் கபூரின் மீது கவனத்தை செலுத்தினார்கள். ஆனால் ரன்பீர் கபூர் இதை கேட்டு சிரித்தபடி அமர்ந்திருந்தார். அப்போதுதான், தான் பெயரை மாற்றி சொல்லி விட்டோம் என்பதை உணர்ந்த தில் ராஜ் உடனடியாக, ரன்பீர் கபூர் காரு ஐ அம் சாரி என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இப்போதும் கூட பல பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் ரன்வீர் சிங் மற்றும் ரன்பீர் கபூர் பற்றிய பெயர் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. தில் ராஜு மூலமாக அது தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !