ராஷ்மிகாவின் மைசா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ரணபாலி படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமணத்திற்குப் பிறகு வெளியாகும் முதல் படம் இதுவாகும். இந்த ஆண்டில் ராஷ்மிகா நடிப்பில் வெளியாகவுள்ள மற்றொரு படம் மைசா. இது அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இரண்டாவது பெண் மையப்படமாகும்.
இப்படத்தை நவம்பர் 27ம் தேதி அன்று வெளியிட படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இருப்பினும், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. திரையுலக வட்டார தகவல்களின்படி, ரணபாலி மற்றும் மைசா ஆகிய இரு படங்களுக்கும் இடையிலான கால இடைவெளி மிகக் குறைவாக இருப்பதாக ராஷ்மிகா மந்தனாவும், தயாரிப்பாளர்களும் கருதுகின்றனர். அதனால், இப்படத்தை 2027 ஜனவரி மாத இறுதியில் வெளியிட தயாரிப்புக்குழு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ராஷ்மிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்த முதல் பெண் மையத் திரைப்படமான தி கேர்ள்பிரண்ட் நல்ல வெற்றியைப் பெற்றது. அந்த வரிசையில் மைசா அவரது இரண்டாவது திரைப்படமாகும். மேலும் இதில் முதல்முறையாக ஆக்ஷன் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா கோண்ட் என்கிற பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார்.