சிரஞ்சீவி படத்தில் இணைந்த கபீர் துகான் சிங்
ADDED : 10 hours ago
தெலுங்கில் தற்போது இயக்குனர் பாபி கொல்லி டைரக்ஷனில் காகா என்கிற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. கதாநாயகிகளாக நிவேதா பெத்துராஜ் மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் பிரபல பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் இணைந்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்னொரு பாலிவுட் நடிகரான கபீர் துகான் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இவர் தமிழில் வேதாளம், காஞ்சனா 3, ஆக்ஷ்ன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இதில் நடித்து வரும் அனுராக் காஷ்யப் தான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே வெளிப்படையாக கூறியுள்ளார். அதேசமயம் கபீர் துகான் சிங் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் அவர் ஒரு அண்டர் கவர் ஏஜென்ட் ஆக நேர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.