இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ஜெயிலர் 2
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படம், திரையரங்குகளில் வெளியான கடந்த ஐந்து நாட்களில் பல சாதனைகளைக் குவித்து வருகிறது. இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையைப் பெற்றதுடன், இந்த ஆண்டின் ஐந்தாவது அதிக வசூல் செய்த இந்திய படமாகவும் உருவெடுத்துள்ளது.
இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை குறித்து பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் குமார் பிஜிலி மீடியாக்களிடம் கூறுகையில், ஜெயிலர் 2 படம் 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வையார்களுடன் வலுவான தொடக்க வார இறுதி வசூலாக, ரஜினிகாந்தின் நிகரற்ற நட்சத்திர அந்தஸ்திற்கும், ஈர்க்கும் சினிமாவுக்கும் கிடைத்த சான்றாகும். இதுபோன்ற படங்கள் பெரிய திரையால் மட்டுமே சாத்தியமாகும் வகையில் ரசிகர்களை ஒன்றிணைக்கின்றன. இது திரையரங்க அனுபவத்தின் அழியாத வலிமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிவிஆர் ஐநாக்ஸில், இந்த வேகத்தால் நாங்கள் ஊக்கமடைந்துள்ளோம். மேலும் பல எண்ணிக்கையில் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வலுவான உள்ளடக்கத்தின் மீதான நம்பிக்கையுடன் தொடர்கிறோம் என்றார்.
நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் 2 படத்தில், ஜெயிலர் படத்தில் வர்மன் தலைமையிலான கும்பலுக்குப் பின்னணியில் இருந்த மிகப்பெரிய சிலை கடத்தல் கும்பலை வீழ்த்தும் நோக்கத்துடன் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் மீண்டும் களமிறங்கியுள்ளார்.
இந்த ஜெயிலர் -2 படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், மிதுன் சக்கரவர்த்தி, வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.