உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : வெளிநாட்டு வசூல் 20 மில்லியன் யுஎஸ் டாலர்

ஜெயிலர் 2 : வெளிநாட்டு வசூல் 20 மில்லியன் யுஎஸ் டாலர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படம் கடந்த வாரம் அக்டோபர் 15ம் தேதி வெளியானது. இப்படத்தின் வசூல் எவ்வளவு என்பதை தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

ஆனால், வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பதை அதன் வினியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மொத்தமாக 20 மில்லியன் யுஎஸ் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 190 கோடி. பாக்ஸ் ஆபீஸ் வரலாற்றை இந்தப் படம் மாற்றி எழுதியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

203 கோடியுடன் விஜய் நடித்து 2023ல் வெளிவந்த 'லியோ' படம் முதலிடத்தில் இருப்பதாகத் தகவல் இருக்கிறது. அந்த சாதனையை 'ஜெயிலர் 2' இன்னும் சில நாட்களில் முறியடித்துவிடும் என்கிறார்கள்.

2023ல் வெளிவந்த 'ஜெயிலர்' படம் 190 பிளஸ் கோடியுடன் இருக்கிறது. அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுவிடும்.

தென்னிந்தியப் படங்களைப் பொறுத்தவரையில் 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கல்கி 2898 ஏடி, புஷ்பா 2, லியோ' ஆகிய படங்கள் டாப் 5 வசூலில் உள்ளன. அடுத்து 'ஜெயிலர் 2', படம் 'லியோ' படத்தை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !