உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமெடி கதாபாத்திரத்தில் 'ஜெயிலர்' வில்லன் நடித்துள்ள படம் நாளை ரிலீஸ்

காமெடி கதாபாத்திரத்தில் 'ஜெயிலர்' வில்லன் நடித்துள்ள படம் நாளை ரிலீஸ்


சமீபத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் சிலை கடத்தல் வேலையைச் செய்யும் ரவுடியாக நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு திலீப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும் 'ஜெயிலர்' முதல் பாகத்தில் இதேபோன்ற வர்மன் எங்க கதாபாத்திரத்தில் நடித்திருந்த மலையாள நடிகர் விநாயகன் இவரைவிட மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பதை மறுப்பதற்கு இல்லை. அந்த அளவிற்கு ஜெயிலர் படத்திற்கு பக்கபலமாக இருந்தத்து அவரது நடிப்பு.

அதன் பிறகு மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்து வெளியான 'களம்காவல்' படத்தில் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சீரியஸான நடிப்பையே வெளிப்படுத்தி இருந்தார் விநாயகன். இந்த நிலையில் தற்போது அவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'டைட்டன்ஸ்' என்கிற படம் நாளை (அக்.,22) வெளியாகிறது. பேண்டஸி, நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெயசூர்யா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிரின்ஸ் ஜாய் இயக்கியுள்ளார். ஜெயிலர் வில்லனின் இன்னொரு விதமான நடிப்பை இந்த படத்தில் நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !