உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியான பிறகு தமிழில் திரையரங்குகளில் வெளியாகும் பார்வதியின் படம்

ஓடிடியில் வெளியான பிறகு தமிழில் திரையரங்குகளில் வெளியாகும் பார்வதியின் படம்


மலையாளத்தில் கடந்த செப்.,11ல் பார்வதி நடித்த 'பிரதம திருஷ்த்ய குற்றக்கார்' என்கிற படம் வெளியானது. இதில் முதல் முறையாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பார்வதி நடித்திருந்தார். வாரிசு அடிப்படையில் போலீஸ் வேலைக்கு சேரும் இளம்பெண் அந்த காவல் நிலையத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. கடந்த அக்-9ஆம் தேதி இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. இந்தநிலையில் இந்தப்படம் தமிழில் பிடிகே என்கிற பெயரில் வரும் அக்-23ஆம் தேதி தமிழக திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் மலையாளத்தில் இருந்தோ அல்லது எந்த மொழியில் இருந்தோ ஓடிடியில் வெளியானால் உடனடியாக பிற மொழிகளிலும் பார்க்கும் மொழித்தேர்வு வாய்ப்புடன் தான் ஒளிபரப்புவார்கள். ஆனால் தற்போது இந்த படம் ஒடிடியில் வெளியான பிறகும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாவது ஆச்சர்யமான விஷயம் தான். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !