உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மண்டாடி, பத்தா, மீசையமுறுக்கு 2, டோரதி, மொத ராத்திரி' பட வசூலுக்கு செக் வைத்த 'ஜெயிலர் 2'

'மண்டாடி, பத்தா, மீசையமுறுக்கு 2, டோரதி, மொத ராத்திரி' பட வசூலுக்கு செக் வைத்த 'ஜெயிலர் 2'


கடந்த சில மாதங்களாக, தமிழ் சினிமா உற்சாகமாக இருந்தது. சூரி நடித்த 'மண்டாடி' படம் ஹிட்டானது. அந்த படம் நல்ல வசூலை ஈட்டியது. அடுத்து வந்த ஹிப் ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2' மற்றும் விஜய் சேதுபதியின் 'பத்தா', ரிஷிகாந்த் நடித்த 'மொத ராத்திரி' படங்களுக்கும் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. கடைசியாக வந்த 'டோரதி' கூட நல்ல வசூலை பார்த்தது.

இந்த 5 படங்களின் வெற்றியால் கோலிவுட் ராக்கிங் என்று மற்ற மாநிலங்களில் பேசினார்கள். குறிப்பாக, சில ஆண்டுகளாக மலையாள சினிமா, கன்னட, தெலுங்கு சினிமா வசூல் பெற்று வந்த நிலையில், இந்த படங்களின் வெற்றி தமிழ் சினிமாவை தலை நிமிர செய்தது. ஆனால், 'ஜெயிலர் 2' என்ற ஒரே ஒரு படம் வந்த நிலையில் இந்த 5 படங்களின் வசூலும் நின்றுவிட்டது.

பெரும்பாலான தியேட்டர்களில் இந்த படம் துாக்கப்பட்டு, தமிழகத்தில் 'ஜெயிலர் 2' மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த 5 படங்களில் மண்டாடி, 180 கோடி வசூலில் முதலிடத்திலும், மீசையமுறுக்கு 2 படம் 60 கோடியை தாண்டி அடுத்த இடத்திலும் இருப்பதாக தகவல். பத்தாவும் 30 கோடியை தாண்டிவிட்டதாம். டோரதி, மொத ராத்திரி சின்ன பட்ஜெட் படம் என்பதால் அனைத்து தரப்புக்கும் லாபம். அசோக்செல்வனின் அன்பில் அவன் கூட லாபத்தை தொட்டுவிட்டது என்கிறார்கள். ஆனாலும், ஜெயிலர் 2 என்ற சுனாமியால் கடந்த வாரத்துடன் இந்த படங்கள் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !