உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / துபாயில் நடக்கும் ‛சீன்' பட நிகழ்ச்சி : நஸ்ரியாவுக்காக காத்திருக்கும் தமிழ் ரசிகர்கள்

துபாயில் நடக்கும் ‛சீன்' பட நிகழ்ச்சி : நஸ்ரியாவுக்காக காத்திருக்கும் தமிழ் ரசிகர்கள்

ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நடிக்கும் சீன் படம், தீபாவளி விருந்தாக நவம்பர் 6ம் தேதி வெளியாகிறது. சூர்யா நடித்த கருப்பு, விஸ்வநாதன் அன்ட் சன்ஸ் படங்கள் வெற்றி பெற்றுள்ளதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இன்னமும் பட விளம்பர பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி துபாயில் சீன் பட விளம்பர நிகழ்ச்சி நடக்கிறது. அதில் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் சீன் பட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

தமிழில் நேரம், வாயை மூடி பேசவும், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்காஹ் படங்களில் நடித்தவர் நஸ்ரியா. இவர் நடிகர் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டபின் தமிழில் நடிக்கவில்லை. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் சீன் பட நிகழ்ச்சிகளில் நஸ்ரியாவை பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த படம் ஒரு கண் பார்வையற்ற போலீஸ் ஆபிசரின் விசாரணை சம்பந்தப்பட்ட கதை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !