உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவம்பர் 27க்கு தள்ளிப்போகிறது டெலிவரி பாய்

நவம்பர் 27க்கு தள்ளிப்போகிறது டெலிவரி பாய்

லியோ சிவகுமார், பிரிகிடா நடித்த டெலிவரிபாய், நாளை மறுநாள் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஜெயிலர் 2 பட வெற்றி காரணமாக, தியேட்டர் கிடைக்காத நிலையில், படத்தின் வெளியீட்டை மாற்றுவதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், ரசிகர்களின் கொண்டாட்டம் தொடரும் வகையில் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகவிருந்த படம் நவம்பர் 27க்கும் மாற்றப்பட்டுள்ளது. தலைவரின் வெற்றியைக் கொண்டாடுவோம்! என்று படக்குழு அறிவித்துள்ளது.

அதேபோல் தீபாவளிக்கு வெளியாக இருந்த விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படமும் பின்வாங்குவதாக தகவல். பெரிய படங்கள் வெளியாகும்போது நாம் என்ட்ரி ஆவது ரிஸ்க். தியேட்டர் கிடைக்காது. வேறு வகை பிரச்னை ஏற்படும். பொருள் இழப்பு ஏற்படும் என நினைத்து இந்த படங்கள் பின்வாங்குவதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !