உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்துரை: மூக்குத்தி அம்மனாக நடிக்கும் சுஜிதா

சின்னத்துரை: மூக்குத்தி அம்மனாக நடிக்கும் சுஜிதா


நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கிய 'மூக்குத்தி அம்மன்' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இதிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

இந்த நிலையில் 'மூக்குத்தி அம்மன்' என்ற சின்னத்திரை தொடர் ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் மூக்குத்தி அம்மனாக சுஜிதா நடிக்கிறார். அவருடன் வைஷ்ணவி ('வீரா' சீரியல் புகழ்), சல்மானுள், ஸ்ரீகுமார் மற்றும் சுதா சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மூக்குத்தி அம்மன் ஆக நடிப்பது குறித்து சுஜிதா கூறும் போது, ஏற்கனவே ஒரு சீரியல்ல அம்மனா நடிச்சிருக்கேன். தெலுங்கு சீரியல்லயும் அம்மனா நடிச்சிருக்கேன். இப்ப திரும்பவும் அம்மன் கேரக்டர். இதெல்லாம் சும்மா நடக்கறதில்லைன்னு நான் நம்புறேன். அம்மன் கேரக்டர் அமையுறது ஒரு கொடுப்பினை. எனக்கு அது வாய்ச்சிருக்கு” என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !