'ஜெயிலர் 2' குழுவிற்கு அல்லு அர்ஜூன் பாராட்டும் வாழ்த்தும்…
நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் 2' படம் 600 கோடி வசூலை நெருங்கி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
'ஜெயிலர் 2' படத்தைப் பார்த்த பின்பு பல சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் படத்தைப் பார்த்துவிட்டு சற்று முன் எக்ஸ் தளத்தில் படம் பற்றி பதிவிட்டுள்ளார்.
அதில், “ஜெயிலர் 2, ரஜினி சார் அவர்களின் நட்சத்திர அந்தஸ்து, கம்பீரம் மற்றும் தனித்துவமான ஆளுமைக்கு ஒரு மிகச் சிறந்த சான்று. விறுவிறுப்பான, அதிரடி நிறைந்த ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படம்.
இசை அமைப்பாளர் அனிருத் அசத்திவிட்டார். படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரும் தங்கள் முழு அர்ப்பணிப்பையும் கொடுத்துள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பரிசளித்துள்ளார்.
500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் சாதனையை ரஜினி சாரால் மட்டுமே செய்ய முடியும்—அதுவும் அவர் அணிந்திருக்கும் சட்டை துளியும் சுருங்காமல், அவ்வளவு நேர்த்தியாக.
ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.