உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவை கண்டு வியக்கிறேன்: நடிகை மதுபாலா

ராஷ்மிகாவை கண்டு வியக்கிறேன்: நடிகை மதுபாலா


90களில் 'அழகன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி' என இளம் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை மதுபாலா. தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது, நடிகை ராஷ்மிகா மந்தனாவின் தைரியம் குறித்து ரொம்பவே சிலாகித்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ''பாலிவுட்டில் ராஷ்மிகாவின் தென்னிந்திய உச்சரிப்பு தொடர்பாக எழுந்த விமர்சனங்களை, அவர் எதிர்கொண்ட விதம் என்னை கவர்ந்தது. 'ஆம், நான் ஒரு தென்னிந்திய பெண்; எனக்கு தென்னிந்திய உச்சரிப்பு இருக்கத்தான் செய்யும்' என்று ராஷ்மிகா மிகவும் கூலாகவும் நம்பிக்கையுடனும் அதை கையாண்டதை நான் ரசிக்கிறேன். இதே நான் இந்தி திரைப்படத்துறையில் நுழைந்த காலத்தில் என் உச்சரிப்பு குறித்து எழுந்த விமர்சனங்களை கண்டு பயந்தேன். அதற்காக இந்தி மொழியை சரியாக கற்றுக் கொள்ள ஒரு ஆசிரியரிடம் பயிற்சியும் பெற்றேன் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !