கேரளாவில் முதல் கட்டமாக 3டியில் மட்டுமே வெளியாகும் ராமாயணம் மலையாள பதிப்பு
பாலிவுட்டில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ராமாயணம். வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக இது ரிலீஸாகிறது.. இந்த நிலையில் இந்த படத்தின் கேரள விநியோக உரிமையை இ4 எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஏவிஏ புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பெற்றுள்ளன. அதேசமயம் கேரளாவில் இப்படத்தின் மலையாள பதிப்பு முதல் கட்டமாக 3D வடிவத்தில் மட்டுமே திரையிடப்படும் என்று விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
காரணம் படத்தின் விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிகத் தரமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அதன் முழுமையான திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்கள் பெரிய திரையில் 3Dயில் மட்டுமே பெற முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.. அதேசமயம் ஹிந்தி ஒரிஜினல் பதிப்பு முதல் நாளிலிருந்து அனைத்து வடிவங்களிலும் திரையிடப்படும் என்றும் கூறியுள்ளார்கள்..