உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஹத் பாசில் - மோகன்லால் ; சூர்யா பட இயக்குனரின் இரட்டை நிலைப்பாடு

பஹத் பாசில் - மோகன்லால் ; சூர்யா பட இயக்குனரின் இரட்டை நிலைப்பாடு


சூர்யா நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகை ரிலீஸாக வெளியாக இருக்கும் படம் 'சீன்'. கதாநாயகியாக நஸ்ரியா நடிக்க, மலையாளத்தில் பஹத் பாசில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ஆவேசம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஜீத்து மாதவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, இந்த படத்தின் கதையை பஹத் பாசிலை மனதில் வைத்து தான் எழுதியதாகவும், ஒரு கட்டத்தில் இதை சூர்யாவுக்காக அப்படியே மாற்றியதாகவும், அதற்கு பஹத் பாசில் ஒப்புதல் அளித்தார் என்றும் கூறியிருந்தார்.

அதே சமயம் நடிகர் மோகன்லாலை வைத்து இவர் ஒரு படம் இயங்குவதாக அப்போது பரபரப்பாக பேச்சு அடிபட்டது. ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இது குறித்து சமீபத்திய பேட்டியில் இயக்குனர் ஜீத்து மாதவன் கூறும்போது, ''அந்த படத்திற்கு நிறைய சண்டைக் காட்சிகளும் பல நாட்கள் தொடர்ச்சியான படப்பிடிப்பும் தேவைப்பட்டது, ஆனால் மோகன்லால் வசம் அவ்வளவு நாட்கள் கால்ஷீட் இல்லை என்பதால் அந்த படம் தற்காலிகமாக அல்லாமல் முழுமையாகவே கைவிடப்பட்டது.. மோகன்லாலை மனதில் வைத்து நான் இந்த படத்தின் கதையை முழுமையாக எழுதினேன், ஆனால் வேறு எந்த நடிகரையும் அந்த இடத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாது, அதனால் மோகன்லாலை வைத்து இந்த படம் நடக்காது என்பதால் வேறு எந்த நடிகரையும் வைத்து இந்த படத்தை இயக்க தனக்கு விருப்பமில்லை என்று இந்த படத்தை முற்றிலுமாக கைவிட்டோம்'' என்று கூறியுள்ளார் ஜித்து மாதவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !