உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்பு

டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து விலகுவதாக ரெஜினா அறிவிப்பு

நடிகை ரெஜினா, டெமாக்ரடிக் சங்கா அமைப்பிலிருந்து இணை நிறுவனர் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டெமாக்ரடிக் சங்கா என்பது ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இயங்கி வரும் ஒரு தொண்டு நிறுவனமாகும். ரெஜினா, தீப்தி ஆலபாட்டியுடன் இணைந்து இந்த அமைப்பைத் தொடங்கினார்.

தனது முடிவை அறிவித்த ரெஜினா, தான் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாகவும், தனது பிற முக்கிய பணிகளில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது என்றும் தெரிவித்துள்ளார்.

ரெஜினா பல ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபகாலமாக, அவர் ஹிந்தி வெப் தொடர்களிலும் எதிர்மறை கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்த ரெஜினா, தற்போது மூக்குத்தி அம்மன்-2 படத்திலும் நெகட்டீவ் வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !