தீபாவளி போட்டியில் இரண்டே இரண்டு, ஆனால், பொங்கலுக்கு…. எத்தனை தெரியுமா ?
2026ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தமிழ் சினிமாவில் பெரிய போட்டி இல்லை. இரண்டே இரண்டு நேரடி தமிழ்ப் படங்கள்தான் வெளியானது. சூர்யா நடித்த 'சீன்', நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன் 2' ஆகிய படங்கள் வெளிவந்தன. மூன்று நாட்கள் விடுமுறை, காலை 6 மணி காட்சிகள் என இந்தப் படங்கள் முடிந்த வரையில் வசூலைப் பெற்று வருகின்றன.
தீபாவளியை அடுத்து பண்டிகை நாளாக பொங்கல் ரிலீஸ் தான் முக்கியத்துவம் பெறும் நாளாக இருக்கும். 2027ம் ஆண்டு பொங்கலுக்கு நான்கைந்து படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தியாகராஜன் குமாரராஜ இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் 'பாக்கெட் நாவல்', பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, தினேஷ் நடிக்கும் 'வேட்டுவம்', அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'டிமான்டி காலனி 3', யு டியூபர் விஜே சித்து இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' ஆகிய படங்களை பொங்கலுக்கு வெளியிடுவதாக எற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்', படத்தையும் பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
பொங்கலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் இதில் என்ன வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம்.