உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டிராகன்' படத்தை அடுத்து 2 படங்களில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!

'டிராகன்' படத்தை அடுத்து 2 படங்களில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள படம் 'டிராகன்'. அவருடன் ருக்மணி வசந்த், அனில் கபூர், பிஜூமேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் 2027ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இப்படத்தை என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக, 'தான வீர சூர' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இருப்பினும், படக்குழுவினர் இன்னும் படத்தின் தலைப்பையோ அல்லது வெளியீட்டுத் தேதியையோ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். இதுதவிர, 'காட் ஆப் வார்' என்ற பெயரில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !