உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30 கோடி முன்பதிவு வசூலை நெருங்கும் 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே'

30 கோடி முன்பதிவு வசூலை நெருங்கும் 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே'

ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவஞ்சர்ஸ் வரிசையில் அடுத்த படமான 'அவஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படம் டிசம்பர் 18ல் உலகம் முழுவதிலும் வெளியாக உள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் முன்பதிவு கடந்த வாரமே ஆரம்பமாகிவிட்டது. சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, டில்லி, உள்ளிட்ட பெரு நகரங்களில் இப்படத்திற்கான முன்பதிவு படம் வெளியாகும் சில நாட்களுக்கு ஏற்கெனவே முடிந்துவிட்டது.

இந்திய முன்பதிவின் மூலம் மட்டும் வசூல் சுமார் 30 கோடியை நெருங்கி வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் பிரிமியம் தியேட்டர்களில் இப்படத்திற்கான ஒரு டிக்கெட் விலை 4000 ரூபாய் வரை இருக்கிறது. அதற்கடுத்து பெங்களூருவில் அதிபட்சமாக 2870 ரூபாய் வரையிலும், டெல்லியில் 2250 ரூபாய் வரையிலும், புனேவில் 2000 ரூபாய் வரையிலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவஞ்சர்ஸ் சீரிஸ் படங்களைப் பார்க்க இந்தியாவில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர்கள் இவ்வளவு டிக்கெட் கட்டணம் கொடுத்து படங்களை முன்பதிவு செய்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !