புதிய உடல்நல பிரச்சினையில் தவிக்கும் பார்வதி
தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகை பார்வதி திருவோத்து. தமிழில் இவர் 'பூ', 'மரியான்', 'தங்கலான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பொதுவெளியில் தனது சமூக கருத்துகளை வெளிப்படையாக பேசும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.
இந்த நிலையில் பார்வதி 'ஏடிஹெச்டி' என சுருக்கமாக அழைக்கப்படும் உடல்நல பிரச்னையில் தவிக்கிறார். அதாவது கவனக்குறைவு, அதிவேக செயல்பாடு குறைவு என்பது இந்த நோய் தரும் பிரச்னைகள்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : எனக்கு கவனக்குறைவு மற்றும் அதிவேக செயல்பாடு குறைபாடு (ஏடிஹெச்டி) உள்ளது. ஆனால், அதை நான் பெரிய விஷயமாக கருதவில்லை. என்னைப் பொறுத்தவரை காலம் மற்றவர்களைப் போல எனக்கு செயல்படவில்லை. அது நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இனி உழைப்பேன். நான் கடுமையாக உழைத்தேன். இந்த பிரபஞ்சம் அதன் ஆசிர்வாதத்தை திருப்பி வழங்கியது. எனக்கு ஆச்சரியமான வாய்ப்புகள் எல்லாம் கிடைத்தது. என்றார் பார்வதி.