உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் வீட்டுக்குள் சீனியர் மாணவரை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா மந்தனா

பிக்பாஸ் வீட்டுக்குள் சீனியர் மாணவரை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த மாதம் 'ரணபாலி' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக அவர் தற்போது நடித்துள்ள 'மைசா' திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனைத் தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ராஷ்மிகா.

அங்கே உள்ள போட்டியாளர்களில் முகேஷ் கவுடா என்பவர் ராஷ்மிகாவை பார்த்ததும், நீங்கள் கல்லூரியில் எனக்கு ஜூனியராக இருந்தீர்கள், உங்களை நான் அங்கே பார்த்திருக்கிறேன் என்று கூறினார். இதைக் கேட்டு ராஷ்மிகா ஆச்சரியமடைந்தார். அந்த போட்டியாளரை ராஷ்மிகாவிடம் அறிமுகப்படுத்திய நாகார்ஜுனா முகேஷிடம், ராஷ்மிகா இங்கே இருக்கிறார், மைசூர் கன்னடமோ அல்லது பெங்களூரு கன்னடமோ உங்களுக்கு விருப்பமானதில் அவருடன் பேசுங்கள் என்று கூறினார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !