உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இந்தியன் 3' - தொடரும் படப்பிடிப்புக்கான சிக்கல் ?

'இந்தியன் 3' - தொடரும் படப்பிடிப்புக்கான சிக்கல் ?

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், 2024ல் வெளியாகி தோல்வியை சந்தித்த படம் 'இந்தியன் 2'. அப்படத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான காட்சிகள் முன்னோட்டமாக இடம் பெற்றிருந்தன.

'இந்தியன் 2' வெற்றி பெற்றிருந்தால் அடுத்த சில மாதங்களில் 'இந்தியன் 3' வெளியாகி இருக்கும். ஆனால், படம் தோல்வியடைந்ததால் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

கடந்த அக்டோபர் மாதம் 'இந்தியன் 3' குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்கள். 2027ல் படத்தை வெளியிட உள்ளதாகவும் கோலிவுட்டில் தெரிவித்தார்கள்.

இருப்பினும் 10 முதல் 15 நாட்கள் வரை படப்பிடிப்பை மீண்டும் நடத்த ஷங்கர் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதாம். ஆலோசனைக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் அதை ஏற்றுக் கொண்டதாம்.

ஆனால், கமல்ஹாசன் இன்னும் தேதிகளைத் தரவில்லை என்கிறார்கள். அவர் தற்போது 'சண்டியர்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே, இது குறித்து சமீபத்தில் சென்னை வந்த லைகா தயாரிப்பாளர் சுபாஷ்கரனை இயக்குனர் ஷங்கர் சந்திக்க முயன்றதாகவும் அது நடக்கவில்லை என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

'இந்தியன் 3' அறிவிப்பு வந்த பிறகும் இப்படியான சிக்கல்கள் தொடர்வது படம் எப்போது வரும் என்ற சந்தேகத்தை இன்னும் அதிகரிக்க வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !