உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆசிரியைக்கு ஒரு நியாயம், நடிகைக்கு ஒரு நியாயமா? - மியா ஜார்ஜ் ஆதங்கம்

ஆசிரியைக்கு ஒரு நியாயம், நடிகைக்கு ஒரு நியாயமா? - மியா ஜார்ஜ் ஆதங்கம்

தமிழில் ‛‛இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து'' உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மியா ஜார்ஜ். கடந்த 2020ல் அஸ்வின் பிலிப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி உள்ள காஸ்மிக் சாம்சன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மியா ஜார்ஜ். திருமணத்திற்கு பிறகு இவருக்கு பட எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது இரண்டு வருட இடைவெளியில் இந்த படம் மியா ஜார்ஜ் நடிப்பில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மியா ஜார்ஜ் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு குறைவது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நமக்கே தெரியாமல் திருமணம் ஆன நடிகைகள் இனி மீண்டும் நடிக்க வர மாட்டார்கள் என்ற எண்ணத்தை சினிமாவில் உருவாக்கி விட்டார்கள்.. அதுவும் குழந்தை பெற்றுவிட்டால் நாம் மீண்டும் வரவே மாட்டோம் என்று மற்றவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.. நம்மிடம் நீங்கள் நடிக்கிறீர்களா என்கிற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை.. ஒரு ஆசிரியை மகப்பேறு விடுப்புக்கு பிறகு மீண்டும் பணிக்கு திரும்பும்போது அதை யாரும் விசித்திரமாக பார்ப்பதில்லை. யாருக்கும் அதில் சிக்கல் இருப்பதில்லை.. ஆனால் நடிகைகள் விஷயத்தில் மட்டும் திருமணத்திற்கும் குழந்தை பிறப்பிற்கும் பிறகு அவர்கள் நடிக்க வர மாட்டார்கள் என்கிற முத்திரை பதிந்து விட்டது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !