உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழு வருடத்திற்கு பிறகு கோவிந்தாவை மீண்டும் நடிப்புக்கு அழைத்து வரும் அட்லி?

ஏழு வருடத்திற்கு பிறகு கோவிந்தாவை மீண்டும் நடிப்புக்கு அழைத்து வரும் அட்லி?

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ராக்கா படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இதில் தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.. இந்த நிலையில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் கோவிந்தா நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கோவிந்தா தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முதல் படமாக இது அமையும்.. அது மட்டுமல்ல கடந்த 2019ல் வெளியான ரங்கீலா ராஜா என்கிற படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கோவிந்தா நடிக்கவில்லை.. அதனால் ஏழு வருடங்கள் கழித்து அட்லி படத்தின் மூலம் மீண்டும் நடிப்புக்கு கோவிந்தா திரும்புவார் என எதிர்பார்க்கலாம்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !