உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வட அமெரிக்காவில் 30 மில்லியன் வசூல் கடந்து 'ராமாயணா' புதிய சாதனை

வட அமெரிக்காவில் 30 மில்லியன் வசூல் கடந்து 'ராமாயணா' புதிய சாதனை

இந்தியத் திரைப்படங்கள் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெறுவது வழக்கம். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களுக்கென அங்கு தனி மார்க்கெட் உள்ளது. வெளிநாட்டு வசூலில் வட அமெரிக்காவும் முக்கிய இடத்தில் உள்ளது.

இதுவரையில் அங்கு வெளியான ஹிந்திப் படங்களில் 'ராமாயணா' திரைப்படம் 30 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் குவித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 279 கோடி.

இதற்கு முன்பு எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் 30 மில்லியன் வசூலைப் பெற்றதில்லை. இந்த வருடத்தில் வெளிவந்த 'துரந்தர் 2' படம் 28.1 மில்லியன் யுஎஸ் டாலர் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை 8 மாதங்களில் 'ராமாயணா' முறியடித்துள்ளது.

வட அமெரிக்காவில் புரிந்த சாதனையோடு இந்தியாவில் நிகர வசூலாக 1000 கோடி வசூலையும் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு “பாகுபலி 2, புஷ்பா 2, துரந்தர் 2' படங்கள் இந்தியாவில் 1000 கோடி நிகர வசூலைக் கடந்த படங்களாக இருக்கின்றன.

ஏனைய படங்களின் இரண்டாம் பாகங்கள்தான் இந்த வசூலைப் பெற்றுள்ளன. ஆனால், 'ராமாயணா' படத்தின் முதல் பாகம் இந்த சாதனையைப் புரிந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !