உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபகாலமாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து வருவதோடு, இசை ஆல்பங்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டாப்டக்கர் என்றொரு இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதில், அவருடன் உச்சனா அமித், ராப்பர் பாட்ஷா,ஜோனிதா காந்தி ஆகியோருடன் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடியிருக்கிறார். அதோடு,இந்த டாப்டக்கர் ஆல்பத்தில் அவர் பாடலும் பாடியிருக்கிறார். இந்த தகவலை வெளியிட்டுள்ள யுவன் சங்கர் ராஜா, இந்த இசை ஆல்பம் விரைவில் யாஷ் ராஜ் என்ற பாலிவுட் தயாரிப்பு நிறுவனத்தின் ஒய்.ஆர்.எப் யூடியூப் சேனலில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !