மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1715 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1715 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1715 days ago
படம் : டும் டும் டும்
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : மாதவன், ஜோதிகா, விவேக்
இயக்கம் : அழகம் பெருமாள்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த அழகம் பெருமாள், 1998ல், முதல் முதலாக படத்தையும்; 1999ல், உதயா படத்தையும் இயக்கினார். அந்த இரண்டு படங்களும், தயாரிப்பு சிக்கலில் சிக்கி, வெளிவர முடியாமல் தவித்தன. இந்நிலையில், தன் சீடருக்காக மணிரத்னமே ஒரு படத்தை தயாரித்தார். அது தான், டும் டும் டும்.
வீட்டில் ஏற்பாடு செய்யும் திருமணத்தில் விருப்பமில்லாத மாதவன், ஜோதிகா இருவரும், திட்டம் போட்டு அதை நிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால், பிறரால் ஏற்படும் சிக்கல் காரணமாக, திருமணம் நின்று விடுகிறது. பின், நகரத்தில் சந்திக்கும் மாதவனுக்கும், ஜோதிகாவிற்கும் காதல் அரும்ப, அவர்கள் இணைந்தனரா என்பது தான், சுவாரஸ்யமான திரைக்கதை.
படத்தை, நெல்லை மண் மணம் வீச இயக்கியிருப்பார், இயக்குனர் அழகம் பெருமாள். அந்த வட்டார வழக்கை கேட்கும்போது, மனதில் இனம் புரியா சந்தோஷம் வரும். முரளி, டில்லி குமார், எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன் ஆகியோரது கதாபாத்திரங்கள், திரைக்கதையின் விறுவிறுப்புக்கு துணை சேர்த்தன.
இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜாவின் இசையில், 'சுற்றும் பூமி, உன் பேரை சொன்னாலே, ரகசியமாய், கிருஷ்ணா கிருஷ்ணா, அத்தான் வருவாக...' பாடல்கள், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. கார்த்திக் ராஜாவிற்கு ஏன் தமிழ் சினிமாவில் தனி இடம் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
தஞ்சை பெரிய கோவிலில் எடுக்கப்படும் எந்தப் படமும் வெற்றி பெறாது என்பது, சினிமா சென்டிமென்ட். அதை உடைத்து, 'தேசிங்கு ராஜா...' என்ற பாடலை, பெரிய கோவிலில் படமாக்கினர்.
டும் டும் டும் சென்று பார்த்தோர் புன்னகையுடன் திரும்பி வந்தனர்.
1715 days ago
1715 days ago
1715 days ago