மீண்டும் அதிரடி காட்ட தயாரான பிரியாமணி
ADDED : 1719 days ago
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் பிரியாமணி, கவர்ச்சிக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. கதை என்ன கேட்கிறதோ அதை செயல்படுத்த நான் ரெடி என்கிற நிலையில் தான் உள்ளார். தற்போது தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடிக்கும் அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளன. இதனால் செகண்ட் இன்னிங்ஸின் மீது அவருக்கான நம்பிக்கை அதிகரித்துள்ளது. அதோடு தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்துள்ளார். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஸ்லிம்மான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவை சமூகவலைதளங்களில் வைரலாகின. சினிமாவில் மீண்டும் அதிரடி காட்ட தயாராகிவிட்டார் பிரியாமணி.