கோஸ்ட் ரைடர் போஸ்டரைக் காப்பியடித்த ஆர்ஆர்ஆர்
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நேற்று அறிவிக்க ஒரு போஸ்டரை வெளியிட்டார்கள். அதில் குதிரையை ஓட்டும் ராம் சரண், பைக்கை ஓட்டும் ஜுனியர் என்டிஆர் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
அந்த போஸ்டர் 2007ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான கோஸ்ட் ரைடர் போஸ்டரின் காப்பி என சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகும் படம் என்கிறார்கள். ஒரு போஸ்டரைக் காப்பியடிக்காமல் புதிதாக உருவாக்கியிருக்கலாமே என்ற பேச்சுதான் அதிகம் அடிபடுகிறது.
ஹாலிவுட்டிலிருந்து கதைகளைத் திருடி படமெடுத்த சில இயக்குனர்களுக்கு மத்தியில் தற்போது போஸ்டர் டிசைனைக் கூட காப்பியடிக்கும் அளவிற்கு நமது இயக்குனர்கள் வந்துவிட்டது அதிர்ச்சியாகத்தான் உள்ளது.