பிரபுதேவாவை இயக்கும் ராகவன்
ADDED : 1945 days ago
'பொன் மாணிக்கவேல், ஊமை விழிகள், பகீரா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து மஞ்சப்பை, காடன் படங்களை இயக்கிய ராகவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். இமான் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(ஜன., 27) பூஜையுடன் துவங்கியது. அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் அபிஷேக் தயாரிக்கிறார். படத்திற்கு பெயர் இன்னும் முடிவாகவில்லை.