வைரலான யோகிபாபுவின் கிரிக்கெட் வீடியோ
தற்போது முன்னணி காமெடி நடிகராக பல படங்களில் பசியாக நடித்து வருகிறார் நடிகர் யோகிபாபு. அதேசமயம் கதையின் நாயகனாக தன்னை மையப்படுத்தி தேடிவரும் படங்களையும் அவர் ஒதுக்குவதில்லை. அந்தவகையில் இப்போது இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகிவரும் 'பொம்மை நாயகி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் ஷான் இயக்குகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூரில் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் படப்பிடிப்பு இடைவேளையின்போது யோகிபாபு கிரிக்கெட் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாகாபா ஆனந்த் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் கிரிக்கெட் விளையாடும் யோகிபாபு பந்தை சிக்ஸருக்கு அடிக்கும் லாவகத்தை பார்த்துவிட்டு, “அவர் அடுத்த ஐபிஎல் மேட்சில் கலந்துகொள்ள வேண்டும்” என்கிற ரேஞ்சுக்கு போன்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.